Home முக்கிய செய்திகள் ஒன்றாய் பொங்கி எழுந்த மக்கள் – கோஷங்களால் அதிர்ந்த கிளிநொச்சி:

ஒன்றாய் பொங்கி எழுந்த மக்கள் – கோஷங்களால் அதிர்ந்த கிளிநொச்சி:

85
0

வட மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மாபெரும் மக்கள் போராட்டத்தினால் இன்று கிளிநொச்சி நகர் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது.

கட்சி பேதமின்றி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்துத் துறையினர், பாடசாலை நிர்வாகங்கள், மதகுருமார் என அனைவரும் ஆதரவு தெரிவித்ததன் வெளிப்பாடாக இம் மாபெரும் கண்டன கவனயீர்ப்பு போராட்டம் அமைந்துள்ளது.

இதனால், யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியன முற்றாக செயலிழந்து காணப்படுகிறது. வவுனியா மாவட்டத்திலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும், போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டும், பாடசாலைகள் இயங்காமலும் தமது ஆதரவை இப் போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர்.

வடமாகாணம் எங்கணூம் இன்று கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

இன்று 25-02-19 காலை 9:00 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உளவுகளால் மேற்கொள்ளப்பட்ட பேரணி, ஏ9 வீதி 155 ஆம் கட்டையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றடைந்தது. அங்கு மனுக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

]]>